டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1.5 விகிதம் குறைந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,டெல்லியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தது.இதனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ படுக்கைகள் போன்றவைகளில் பற்றாக்குறை ஏற்பட்டது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து காணப்பட்டது.
இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அமலில் இருந்தது,இதனையடுத்து,மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில்,கொரோனா பாதிப்பு குறித்து தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,”டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.அதாவது,கொரோனா தொற்று விகிதம் 1.53 விழுக்காடாக குறைந்துள்ளது.எனினும்,கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,072 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…