உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்.! இந்த உறவு தொடரும் என பேட்டி…
மும்பையில் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
நேற்று மும்பையில் உள்ள சிவசேனா (ஒரு பிரிவு) கட்சி தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
சந்திப்பு : இந்த சந்திப்பின் பொது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானும் உடன் இருந்தார். மேலும், இந்த சந்திப்பின் போது உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்ரே மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் இருந்தார்கள்.
விருப்பம் : இந்த சந்திப்பு பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், உத்தவ் தாக்கரேவை சந்திக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து இருந்தேன். இப்போது தான் சந்திக்க முடிந்தது . பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசினோம். தொடர்ந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும், நாங்கள் தொடங்கிய உறவையும் முன்னெடுத்து செல்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா விவகாரம் : சிவசேனா கட்சி தற்போது இரண்டாக பிரிந்து தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தான் பெரும்பபான்மை நிரூபித்து ஆட்சி பொறுப்பில் உள்ளது. உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் உச்சநீதிமன்றத்திலும் , தேர்தல் ஆணையத்திடமும் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.