4ஆம் கிளாஸ் பாஸ் ஆன ராஜா என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு குட்டி கதை ஒன்றை குறிப்பிட்டார்.
மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி நடத்தியது. இதில் ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் , பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய அரவிந்த் கெஜிரிவால் குட்டி கதை ஒன்றை கூறினார். அதாவது, ஒரு நாட்டை நாசப்படுத்திய “படிக்காத, 4ஆம் வகுப்பு பாஸ் செய்த ராஜா” எனும் கற்பனை கதையை (மறைமுகமாக பிரதமர் மோடியை குறிப்பிட்டார்) கூறினார்.
ராஜாவின் ஆட்சியில், அட்டூழியங்கள் நடந்தன. அதே நேரத்தில் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது என்றும், அவருடைய ஆட்சியில் ஒரு ரயில் விபத்து கூட ஏற்பட்டது. அந்த ஒரு வருடத்திலேயே ராஜாவை மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர் என அரவிந்த் கெஜிரிவால் தனது குட்டி ஸ்டோரியை கூறி முடித்தார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…