டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் 4வது முறையாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் புதியதாக அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெற்றுக்கொண்ட மதுபான கொள்கை மூலம் கோடி கணக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் முன்னதாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.!
தற்போது வரையில் அவர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அமலாக்கத்துறையினர் தொடர்ந்து அழைத்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக முன்னதாக கடந்த 2023 ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வுப் பிரிவால் கெஜ்ரிவால் விசாரணை செய்யப்பட்டார்.
அதன் பிறகு, அமலாக்கத்துறையினர், நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21ஆம் தேதியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராவதை தவிர்த்து வந்தார். அதனை அடுத்து மீண்டும் 3வது முறையாக ஜனவரி 3ஆம் தேதி ஆஜராக கோரினர்.
ஆனால், விசாரணை என்று அழைத்து கைது செய்வதே அவர்களின் நோக்கம் என தொடர்ந்து கூறி 3வது முறையும் அமலாக்கத்துறையினரிடம் ஆஜராவதை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார். இதனை தொடர்ந்து தற்போது 4வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…