கடந்த சில நாட்களாக இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பல மாநிலங்களில் இது போன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர்.நாளுக்கு நாள் இந்த சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இந்த மாதிரியான சம்பவங்களை கருத்தில்கொண்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பெண்கள் பாதுகாப்புக்காக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது .அங்கு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியில் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 5,500 பேருந்துகள், கிளஸ்டா் பேருந்துகளிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா, எச்சரிக்கை மணிகள் பொருத்தப்படவுள்ளன.அனைத்துப் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் வசதி செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் 10 எச்சரிக்கை மணிகள் மற்றும் 3 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.இவற்றைக் கண்காணிக்கக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் இதனால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…