பிப்ரவரி 5-ல் டெல்லி தேர்தல்.! வேட்புமனு தாக்கல்., வாக்கு எண்ணிக்கை தேதிகள் இதோ…
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
டெல்லி மாநில 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முக்கிய தேதிகள் :
வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி – ஜனவரி 10, 2025.
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் – ஜனவரி 17, 2025.
வேட்புமனு பரிசீலனை – ஜனவரி 18, 2025.
வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி – ஜனவரி 20, 2025.
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் – பிப்ரவரி 5, 2025 (புதன்).
வாக்கு எண்ணிக்கை – பிப்ரவரி 8, 2025 (சனி).
டெல்லி மாநில தேர்தல் பணிகள் அனைத்தும் பிப்ரவரி 10, 2025-ல் நிறைவு பெரும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.