டெல்லி அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை எழுந்துள்ளது. அதிலும், குறிப்பாக டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி அதிகம் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிக்கு ஐ.சி.யு படுக்கை கிடைக்காததால் உயிரிழந்ததாக நோயாளியின் உறவினர்கள் குற்றச்சாட்டினர். பெண் நோயாளி உயிரிழந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், மருத்துவமனைக்குள் புகுந்து ஐ.சி.யு வார்டு மற்றும் மருத்துவ உபகாரணங்களையும் சேதப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளின் உறவினர்கள் நடந்த தாக்குதலில் மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தனர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…