டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம்
டெல்லி கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை கவுரவிக்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது டெல்லி கிரிக்கெட் சங்கம்.
கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட அருண் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில் அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.