உலகின் பிசியான விமான நிலையங்களின் டாப் 10 லிஸ்டில் டெல்லி விமான நிலையம்.!
உலகின் மிகவும் பரபரப்பான முதல் 10 விமான நிலையங்களின் பட்டியலில், முதல் முறையாக இந்திய விமான நிலையம் ஒன்று அந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும், டெல்லி விமான நிலையம், இந்தியாவின் பரபரப்பான விமான நிலையமாக உலகின் 9-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொது, உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இந்திய விமான நிலையமும் ஒன்றாக இடம்பிடித்திருப்பது இதுவே முதல் முறை.
ஏறக்குறைய 2,000 விமான நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சங்கமான ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல், 2022 ஆம் ஆண்டில் பயணிகளுக்கான உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசை பட்டியிலை நேற்று வெளியிட்டது. கடந்த 2022ம் ஆண்டில் கிட்டதட்ட 6 கோடி பயணிகளை கையாண்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அதில், கடந்த ஆண்டு முதல் 10 விமான நிலையங்களில், ஐந்து அமெரிக்காவிலும், தலா ஒன்று வளைகுடா, இங்கிலாந்து, ஐரோப்பா, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவிலும் இருந்தன. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஆசிய விமான நிலையமாக டெல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.