டெல்லி காற்று மாசு : டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை …!
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரிப்பது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஏனெனில், இதற்கு காரணம் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை எரிப்பதும், வாகனங்கள் வெளியிடும் புகையும் தான் என கருதப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநிலத்தின் சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்கள் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் வணிக வளாகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாகனம் நிறுத்தங்களில் கட்டணம் உயர்த்தப்படும். இதன் மூலம் பொதுமக்கள் சொந்த வாகனத்தை தவிர்த்து பொது போக்குவரத்தை நாடுவார்கள். எனவே, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுவெளியில் பயிர் கழிவுகள் எரிப்பதை கண்காணிப்பதற்காக 550 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.