டெல்லியில் வலுக்கும் போராட்டம்! காவல்துறையினருக்கு எதிராக களத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்!

Default Image

நவம்பர் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள திஸ் ஹஸரி நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை வன்முறையில் முடிந்தது. இதனால் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் உண்டானது. இதில் வழக்கரிஞர்கள், காவல்துறையினர் என பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றமானது, காயமடைந்த வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும்,  உச்சநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், ‘ தாக்குதல் ஏற்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.’ என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று டெல்லி தலைமை காவல் துறை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் வழக்கறிஞர்களுக்கு எதிராக போராடினர். இந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என உயர் அதிகாரிகள் சொல்லியும் போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் கேட்கவில்லை. இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் நீதி வேண்டும் நீதி வேண்டும் என கோஷமிட்டு போராடி வந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று டெல்லி வழக்கறிஞர்கள் காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ‘ நவம்பர் 2ஆம் தேதி நடந்த கலவரத்தில், காவல்துறையினர், எங்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். தடியடி நடத்தினர். ஆதலால் கால்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டனர். நீதிமன்றத்திற்கு பூட்டு போடும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்