நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லயில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் .
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் தொடர்கின்றன.அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக 1.9 கோடி பேர் அடங்கிய தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஆனால் இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முன் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
source: dinasuvadu.com