டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீண்டு, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,887 ஆக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1,100க்கும் மேற்பட்டோர் மீண்டு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,887ஆக குறைந்துள்ளது.
அதாவது, டெல்லியில் 1,32,275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து 1,17,507 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே டெல்லியின் மீட்பு விகிதம் 88.9% ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,881 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியால் நிலைமை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது டெல்லியில் 1.3 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனை தாண்டி அமெரிக்க மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…