உத்திரபிரதேசத்தில் நீக்கப்பட்ட வார இறுதி முழு ஊரடங்கு – வழக்கம் போல இயங்கும் சந்தைகள்!
உத்தரப்பிரதேசத்தில் வார இறுதியில் போடப்பட்டிருந்த முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் பரவி கொண்டே இருந்ததால் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டும், அதிகமாக்கப் பட்டும் கொண்டிருந்தன. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், வாரத்தின் இறுதி நாளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு கொண்டிருந்தது. அன்று சந்தைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்துமே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த மாத தொடக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் வார இறுதியில் போடப்பட்டிருந்த முழு ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டு வழக்கம்போல அனைத்தும் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை தான் அதிகம் ஏற்படுத்த வேண்டும் எனவும், அதிகரித்து வரக்கூடிய கொரோனா வழக்குகளை சமாளிக்க மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழக்கூடிய அனைத்து நபர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.