அரசை விமர்சனம் செய்யும் பதிவுகளை நீக்குங்கள்… 52 பதிவுகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்.!
கொரோனா 2வது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் பதிவுகளை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்து கொண்டியிருக்கின்றனர். இந்த சூழலை அரசு சரியாக கையாளவில்லை என்பதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அரசை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த தவறான செய்தி, பயத்தை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை நீக்க வேண்டும் என மத்திய கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய அரசு வைத்த கோரிக்கையின் படி தவறான தகவல் பரப்பிய ட்விட்டர் பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்திய அரசின் கோரிக்கை ஒரு சட்டபூர்வமானது. ட்விட்டர் மற்றும் உள்ளூர் விதிகள் கொண்டு பயனர்களின் பதிவுகள் தேடப்படும். அப்படி, அந்த பதிவு ட்விட்டர் விதிகளை மீறியிருந்தால், உடனடியாக ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என்றும் பதிவுகள் விதிகளுக்கு உட்பட்டு இருப்பினும், அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டத்துக்கு புறம்பாக இருந்தால் அந்தப் பதிவு இந்தியாவில் மட்டும் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, தற்போது கொரோனா குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட 52 பேரின் ட்விட்டர் பதிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் தெலங்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் மோலோய் கதக், நடிகர் வினீத் குமார் சிங், இயக்குனர் வினோத் கப்ரி மற்றும் அவினாஷ் தாஸ் உள்ளிட்டோரின் பதிவுகளும் அடங்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.
Revanth Reddy’s Tweet criticising the Modi govt which was taken down pic.twitter.com/cjOF6FHdlk
— Conrad Barwa (@ConradkBarwa) April 24, 2021