உருமாறிய கொரோனாவை “இந்திய வகை” என பதிவிடும் கருத்துகளை நீக்குங்கள் – மத்திய அரசு!

Default Image

உருமாறிய கொரோனாவிற்கு இந்திய வகை கொடுமை என சமூக வலைதளங்களில் பதிவிட கூடிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை தொடர்ந்து அண்மையில் இந்தியாவில் முதன்முதலாக பி.1.617 எனும் ஒருவகை கொரோனா கண்டறியப்பட்டது. தற்பொழுது இந்த வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுவதற்கான அபாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு இந்திய வகை கொரோனா என பலரும் தெரிவித்து வருவதுடன் சமூக வலைதளங்களிலும் இந்திய வகை கொரோனா எனும் பெயரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு இந்திய வகை கொரோனா என்று இடம்பெற்றுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாம். இது தொடர்பாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், உலக சுகாதார அமைப்பால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அறிவியல் ரீதியான கருத்துக்களின் மூலம் இந்திய வகை கொரோனா என்று எதுவும் கிடையாது எனவும், இந்திய வகை கொரோனா என்று குறிப்பிடுவது மிகவும் தவறானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி.1.617 வகை கொரோனா இந்திய வகை என உலக சுகாதார அமைப்பு தன்னுடைய எந்த ஒரு அறிக்கையிலும் குறிப்பிடவில்லை எனவும், சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய வகை என பதிவிட படக்கூடிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்