காஷ்மீர் நிலவரத்தை அறியச்சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை சரியில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.மேலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் கூறினார்.இதற்கு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் நிலையை நேரில் வந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இதனால் இன்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ்மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி உள்ளிட்டோர் சென்றனர்.ஆனால் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பிவைக்கபட்டனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…