பிரச்சனை காரணமாக புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்படுகிறது ..!
மும்பை -அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முடியாத சூழல் நிலவுவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு தேவையான நிலங்களை டிசம்பருக்குள் கையகப்படுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் மகாராஷ்டிராவில் விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், திட்டமிட்ட நேரத்துக்குள் நிலத்தை கையகப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் ஜப்பான் இண்டர்நேசனல் கூட்டுறவு முகமையிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் தொகையில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
இப்பிரச்சனைகள் தொடர்பாக ஜப்பான் போக்குவரத்து அதிகாரிகளை இம்மாதம் டோக்யோவில் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.