ஜாதி மதம் அடிப்படையில் கர்நாடகாவை பாஜக பிரிக்கிறது என கார்கே குற்றசாட்டு
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய அவர், கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நாம் ஒற்றுமையாக எதிர்கொண்டால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து வந்ததும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இதுவரை 14 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும் ஆனால் தற்போது நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால் அது ஜனநாயகம் இல்லை, அது சர்வாதிகாரம். ஜாதி மதம் அடிப்படையில் கர்நாடகாவை பாஜக பிரிக்கிறது. காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணிகளை பிரதமர் மோடி நிரப்பவில்லை. ஒருவேளை நிரப்பினால் பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். ஆகையால் ஒப்பந்தம் , தினக்கூலி அடிப்படையில் ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…