#Breaking:டிஜிலாக்கரில் உள்ள டிகிரி,மதிப்பெண் சான்றிதழ் செல்லும் – யுஜிசி அறிவிப்பு!
டிஜிலாக்கர் உள்ள டிகிரி,மதிப்பெண் சான்றிதழ் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம்,2000 இன் விதிகளின்படி,டிஜிலாக்கர் உள்ள டிகிரி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.
இதன்காரணமாக,டிஜிலாக்கர் கணக்கில் வழங்கப்பட்ட பட்டம்(டிகிரி), மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம்,கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
UGC requests all Academic Institutions to accept Degree, Mark-sheets & other documents available in issued documents in DigiLocker account as valid documents: University Grants Commission pic.twitter.com/MuYYjOybSH
— ANI (@ANI) January 7, 2022