BMW காரில் குறைபாடுகள்! ரூ.26 லட்சம் திருப்பித்தர நிறுவனத்துக்கு உத்தரவு.!
BMW காரில் குறைபாடுகளை சரி செய்யாததால், வாங்கியவருக்கு ரூ.26 லட்சத்தை திருப்பித் தருமாறு BMW க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் பிஎம்டபிள்யு BMW, காரில் குறைபாடுகளை சரி செய்து கொடுக்க தவறியதால், காரை வாங்கியவருக்கு காரின் மொத்த விலையான ரூ.26 லட்சத்தை திருப்பித் தருமாறு அந்நிறுவனத்திற்கு டெல்லி மாநில நுகர்வோர் ஆணையம் BMW-க்கு உத்தரவிட்டுள்ளது..
கார் வாங்கிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, உரிமையாளர் பிரேக்கைப் பயன்படுத்தும்போது உரத்த சத்தம் வந்துள்ளது. பல பழுதுகளுக்குப் பிறகும், BMW நிறுவனத்தால் சிக்கல் சரி செய்யப்படவில்லை, மேலும் காரின் இரண்டு டயர்களும் வெடித்தன. இதனையடுத்து காரின் உரிமையாளருக்கு ரூ.26 லட்சத்தை திருப்பித் தருமாறு BMW-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.