5 மாநிலங்களில் படுதோல்வி:இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!

உத்திரபிரதேசம்,பஞ்சாப்,கோவா,உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அதில்,பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றது.மேலும்,பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.ஆனால்,5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது.
அதிலும்,குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.