முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் அதிர்ச்சியில் இருக்கிறார் என தெரிவித்தன நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அவரின் மறைவிற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா ஸ்ரீ பிரணாப் முகர்ஜி உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தவர் என தெரிவித்த அமித்ஷா, அவர் மிகவும் பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். பிரணாப் முகர்ஜீயின் புகழ்பெற்ற வாழ்க்கை, முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…