நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சுஷாந்த் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபர்த்தி கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும், ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியது.
அதில், நேற்று படுகோனுக்கும், ரகுல் ப்ரீத் சிங்க்கும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷ் ஆஜர் ஆனார்.
அவரிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று நடிகை தீபிகா படுகோன் விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இன்று ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் ஆஜர் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…