பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து, இவ்வழக்கை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.
இதனையடுத்து விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பது அவர் மூலமாக தெரிய வந்தது. இது குறித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட சில நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தியதாக தெரிய வந்தது.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரித்துவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று போதை பொருள் தடுப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் தீபிகா படுகோனே. அவரிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது மூன்றுமுறை கண்ணீர் விட்டு அழுதார் என்றும், ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள், அழுது நாடகம் போடாமல் விசாரணைக்கு முழுதாக ஒத்துழைக்குமாறு தீபிகா படுகோனேவிடம் கண்டிப்புடன் கூறினார்கள் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…