இந்தோனேசியா விமான விபத்து – பிரதமர் மோடி இரங்கல்
இந்தோனேசியாவில் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், புறப்பட 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, விமானம் மறைந்தது.
இந்த காணாமல் போன விமானம், “போயிங் 737” மாடல் என்றும், அந்நாட்டு நேரப்படி காலை 07:40 மணிக்கு ஜாவா கடற்பரப்பு வழியாக 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானதால், பெண்டன் மாகாண எல்லைக்கு உள்பட்ட ஜாவா கடற்பரப்பில் விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,இந்தோனேசியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த நேரத்தில் இந்தியா இந்தோனேசியாவுடன் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Deepest condolences to the families of those who lost their lives in the unfortunate plane crash in Indonesia. India stands with Indonesia in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) January 10, 2021