அமெரிக்காவிற்கு நேற்று இரவே தீபாவளி – ப.சிதம்பரம் டுவீட்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற நிலையில், அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது. ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது
ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும்
— P. Chidambaram (@PChidambaram_IN) November 8, 2020