செங்கோட்டை கலவர வழக்கில் நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அன்று நடத்திய டிராக்டர் அணிவகுப்பின் போது செங்கோட்டை மற்றும் டெல்லிக்குள் வன்முறை ஏற்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தீப் சித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என தெரிவித்தார். சித்துவுக்கு ரூ30,000 பத்திரத்தில் ஜாமீன் வழங்கி, நீதிமன்றம் சில நிபந்தனையையும் வழங்கியுள்ளது.
தீப் சித்து காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உங்கள் தொலைபேசியை 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்கள் விசாரணை அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…