செங்கோட்டை கலவர வழக்கில் தீப் சித்துவிற்கு ஜாமீன்..!

செங்கோட்டை கலவர வழக்கில் நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அன்று நடத்திய டிராக்டர் அணிவகுப்பின் போது செங்கோட்டை மற்றும் டெல்லிக்குள் வன்முறை ஏற்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தீப் சித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என தெரிவித்தார். சித்துவுக்கு ரூ30,000 பத்திரத்தில் ஜாமீன் வழங்கி, நீதிமன்றம் சில நிபந்தனையையும் வழங்கியுள்ளது.
தீப் சித்து காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உங்கள் தொலைபேசியை 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்கள் விசாரணை அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025