இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றாலும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை குறைத்து கொண்டேதான் செல்கிறது. மற்ற நாடுகளை கணக்கிடுகையில் முன்பெல்லாம், இந்தியா தான் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் புதிய தொற்றில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்பொழுது மிகக் குறைவான அளவிலேயே புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இருப்பினும் இதுவரை இந்தியாவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,12,704உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 1,31,031 பேர் உயிரிழந்துள்ளனர்.
83,33,013குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,48,660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக கொரோனா வைரஸால் 38,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 472 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற தொடர்ந்து நாம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருப்போம்.