குறையும் கொரோனா: இந்தியாவில் 374 ஆக குறைந்த உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முந்தைய தினங்களை விட குறைந்து 374 ஆக உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் நிலை குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 9,676,801 பேர் கொரோனா தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 140,590 பேர் உயிரிழந்துள்ளனர். 9,138,171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 398,040 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 32,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே தான் வருகிறது. மேலும் மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் இதிலிருந்து முழுமையாக குணமடையலாம்.