புகையிலை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஊக்கமளிக்கிறது – WHO மகிழ்ச்சி!
புகையிலை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஊக்கமளிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகிப்பவர்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடந்த 2015 ஆம் ஆண்டு 1.32 மில்லியனாக இருந்த புகையிலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை, தற்போது 1.30 ஆக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் 1.27 பில்லியன் ஆக குறையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் 2025 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புகையிலை பயன்பாடு 30 சதவீதம் குறைக்க வேண்டும் என இலக்கு இருந்ததாகவும், தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் குறைவான மக்கள் புகையிலை பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது அது தங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது எனவும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் ரெட்ரோஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.