திருப்பதியில் லட்டுகளைக் கொண்டுசெல்ல பனை, தென்னை ஓலைப்பெட்டிகள் விற்பனை செய்ய முடிவு.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வது வாடிக்கை. திருப்பதிக்கு சென்றாலே லட்டு வாங்காமல் பக்தர்கள் திரும்ப வருவதில்லை, திருப்பதி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு என்றே கூறலாம். அந்த அளவிற்கு பக்தர்கள் திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் மீது பிரியமுடன் வாங்கிச்செல்கின்றனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் இனி லட்டுகளை வழங்குவதற்கு, பனை மற்றும் தென்னை ஓலைப்பெட்டிகளை விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுசூழலை காக்கவும், கிராமப்புற தொழில்களை அதிகரிக்கவும் இத்தகைய பனை மற்றும் தென்னை ஓலைப்பெட்டிகள் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பனை, தென்னை ஓலைப்பெட்டிகள் ஒவ்வொரு அளவிலும் ரூ.10, ரூ.15, மற்றும் ரூ.20 விலைகளில் தனி கவுண்டர்கள் அமைத்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…