குஜராத்தில் தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயரை சூட்ட முடிவு..!
குஜராத் மாநிலம் நயாரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயாரின் பெயர் சூட்ட முடிவு.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நயாரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணிகள் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தடுப்பணை 400 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டது. அதற்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயாரின் நினைவாக ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.