ரயில்வே பெயர் பலகையில் மாற்றம் கொண்டுவர முடிவு – மத்திய அமைச்சர்

இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் ஒரே மாதிரியான பெயர் பலகை அமைக்க மத்திய அரசு முடிவு.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஒரே மாதிரியான பெயர் பலகை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தின் அளவு, உருவம், வண்ணம் ஆகியவற்றை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஒரே மாதிரியான பெயர் பலகை அமைப்பதற்கான திட்ட விவரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். ‘அமிர்த் பாரத் ஸ்டேஷன்ஸ் திட்டத்தின்’ கீழ் இந்தியா முழுவதும் 1,275 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து வரும் இந்திய ரயில்வே, பயணிகளுக்கு வசதியாக ரயில் நிலையங்கள் முழுவதும் ஒரே மாதிரியான பெயர் பலகைகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025