பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 வழங்க முடிவு..!
அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு வகையான முன்முயற்சியாக, பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் வகுப்புகளில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு ரூ .100 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
12 ஆம் வகுப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் மாணவர்களுக்கு பிரக்யன் பாரதி யோஜனாவின் கீழ் இருசக்கர வாகனங்களை மாநில அரசு வழக்கும் என சர்மா கூறினார். இதற்காக மாநில அரசு ரூ.144.30 கோடியை செலவிடும் என தெரிவித்தார். இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டினாலும், முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாநில அரசு ஸ்கூட்டர்களை வழங்கும் என்று அவர் கூறினார்.
நடப்பு மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு ரூ .100 திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இருப்பினும், அதை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதி பாதிப்புகள் குறித்து எந்த தகவலையும் அவர் கொடுக்கவில்லை. ரூ.1,500 மற்றும் ரூ .2,000 தொகை ஜனவரி இறுதிக்குள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்த தொகை புத்தகம் மற்றும் பிற பொருட்களை வாங்க உதவும் என்று அமைச்சர் கூறினார்.
நிதி ஊக்கத் திட்டம் இரண்டுமே கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட வேண்டும், ஆனால் கொரோனா பரவுவதால் தாமதமானது என்று அமைச்சர் மேலும் கூறினார்.