#BREAKING :நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு தூக்கு -நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Default Image
  • நிர்பயா வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
  • குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில்  4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் நிலையில் , தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயா பெற்றோர்களின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீது இன்று நடைபெற்ற விசாரணையில் , நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai