நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது ? டிசம்பர் 18 ஆம் தேதி தீர்ப்பு
- நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
- நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட கோரிய மனு டிசம்பர் 18-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதில் சிறுவன் கைது செய்யப்பட்ட சீர்திருத்த பள்ளியில் இருந்த நிலையில் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.மீதமுள்ளவர்களில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது வரை அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.எனவே தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயா பெற்றோர்களின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு மீது இன்று நடைபெற்ற விசாரணையில் ,குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த சீராய்வு மனு வருகின்ற 17 -ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது என்றும் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான தெரிவித்தார்இதனையடுத்து நீதிபதி சதீஸ் குமார் வருகின்ற 18-ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.