பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு.
பீகார் மாநிலத்தில் கன மழையின் போது மின்னல் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு , மூன்று நாள்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பீகார் மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15 கால்நடைகளும் இறந்துள்ளன. இதை தொடர்ந்து இன்று 9பேர் இறந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 92 ஆக அதிகரித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிகபட்சமாக 13 பேர் கோபால் கஞ்ச் பகுதியில் உயிரிழந்துள்ளார்கள், மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…