ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு.!

இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

Kashmir Ganderbal

சோனாமர்க் : ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ககன்கிர் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 2 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மருத்துவர் மற்றும் சிலர்  பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவமும், போலீசும் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளது. இதனிடையே, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, J&K முதல்வர் உமர் அப்துல்லா என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் உமர்  அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்ற பிறகு, காஷ்மீரில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்