ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் தீ விபத்து! 28 பேர் பலி!

rajkot fire accident

ராஜ்கோட்  : குஜராத் ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறப்பு எண்ணிக்கை 28- உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நானா-மாவா சாலையில் விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த விளையாட்டு மையத்தில் மே 25-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை இந்த விளையாட்டு மையத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் விளையாடி கொண்டு இருந்தார்கள்.

அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு கட்டுமானம் சரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால் அப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவலை தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக 28-ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது. 9 குழந்தைகள் உட்பட 28 பேர் தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், உடல் கருகிய படி இறந்த காரணத்தால் யார் யார் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதாகவும் காவல்துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் டிஆர்பி கேம் மண்டலத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் உட்பட 10 பேரை கைது செய்து IPC பிரிவுகள் 304, 308, 337, 338, மற்றும் 114 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இந்த விளையாட்டு மையம் அரசின் தடையில்லா சான்று பெறாமலேயே இயக்கியிருப்பது தெரிய வந்து இருக்கிறது. தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதிரிகளை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்திற்கு குஜராத்தின் முதலமைச்சர் புபேந்திர படேல் இரங்கல் தெரிவித்ததோடு பிரதமர் மோடியுடன் பேசி விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்