வங்கதேச கலவரத்தில் பலி 115ஆக உயர்வு.! 778 மாணவர்கள் நாடு திரும்பினர்.!

Bangladesh riots

பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது, நேற்று மட்டும் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வங்கதேச அரசால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அசாம், மேகாலயா மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பினர் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

டாக்கா, சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மேலும், அங்குள்ள 15,000 இந்தியர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்