கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் நடந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுவர்ணா பேலஸ் என்ற ஓட்டல் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
அந்த தீ விபத்தில் 7பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மீட்பு துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவில் நடந்த இந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது, தீ விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…