கள்ளச்சாராய சாவு ” பலி எண்ணிக்கை 149_ஆக அதிகரிப்பு….அசாமில் அதிர்ச்சி…!!
- அசாமில் கள்ளச்சாரத்தை குடித்து 300க்கும் அதிகமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மேலும் கள்ளச்சாராயம் குடித்த தேயிலை தோட்ட தொழிலாளின் பலி எண்ணிக்கை 149_ஆக அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள மாவட்டம் கோலகாட்.இங்கு சல்மாரா என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அருகில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாரயத்தை குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தனர்.
சாராயம் குடித்த நூற்றுக்கணக்கானோர் குடித்த சில மணி நேரத்திலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தகவல் அங்கே பெரும் ஆச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனை சென்ற போது அங்கே 300_க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் 04 பெண்கள் உட்பட 22 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிச்சியயை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுவரை கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 149 என்று தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக 10 பேரை கைது செய்து சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சாராயத்தை பேரல் பேரலாக கைப்பற்றியுள்ளனர்.