டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்த மனநலம் குன்றிய நபர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்லப் போவதாக 38 வயது மனவளர்ச்சி குன்றிய நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிசிபி ஹரேந்திர சிங் கூறுகையில், நள்ளிரவு 12.05 மணியளவில் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு பிசிஆர் அழைப்பு வந்தது. அழைப்பாளர் யார் என்று அடையாளம் காணப்பட்டது. ஆனால், அந்த நபர் மனநலம் குன்றியவர் ஆவார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை கைது செய்யவில்லை. ஆனால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த நபர் டெல்லி கேட்டில் உள்ள குருநானக் கண் மையத்தில் நர்சிங் ஆர்டராக பணிபுரிவதாக வட்டாரங்கள் தெரிவித்தன என தெரிவித்துள்ளார்.