Categories: இந்தியா

7 பேருக்கு மரண தண்டனை.! லக்னோ என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை. – லக்னோ நீதிமன்றம் உத்தரவு. 

கடந்த, 2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக 2017, மார்ச் 14ஆம்  தேதி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாகவும், அவர்களுடன் இணைந்து கூட்டு சதியில் செயல்பட்டதாவும் முனைந்ததாகவும் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காவல் நிலையத்தில் 8 பேர் மீது முதல் முறையாக FIR பதிவு செய்யப்பட்டது . அதன் பிறகு இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வசம் சென்றது.

ஐஎஸ்ஐஎஸ் : குற்றம் சாட்டப்பட்டவர்கள் உத்தரபிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இணைப்பை நிறுவ முயற்சித்ததாகவும், அதனை அதற்கு முன்னரே. கண்டறிந்து என்ஐஏ சோதனை செய்து உண்மைகளை வெளிப்படுத்தினர்.

தீவிரவாத குறிப்புகள் : இந்த சோதனையில், லக்னோவில், ஹாஜி காலனியில் உள்ள மறைவிடத்திலிருந்து சில குறிப்பேடுகள் கைப்பற்றப்பட்டன. அதில், அடுத்தகட்ட தீவிரவாத இலக்குகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பது பற்றிய விவரங்கள் பற்றிய குறிப்புகள் இருப்பது என்ஐஏ-வால் கண்டறியப்பட்டது.

இணையத்தில் பங்கரவாத பொருட்கள் : என்ஐஏ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் கொடியுடன் கூட பல புகைப்படங்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த குழு பல்வேறு இடங்களில் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவற்றை சேகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அதிஃப் முசாஃபர் இணையத்தின் வாயிலாக பயங்கரவாத பொருட்களை வாங்கியதும் சோதனையில் தெரியவந்தது.

குற்றவாளிகள்  : இந்த வழக்கு விசாரணை லக்னோவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 25 அன்று, ‘கான்பூர் சதி வழக்கு’ தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு பேரும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தனர்.

மரண தண்டனை : இவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…

8 minutes ago

அணையாமல் எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ… பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…

1 hour ago

மகரஜோதி தரிசனத்தை எங்கிருந்து காணலாம்? சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி  திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…

2 hours ago

பொங்கல் சிறப்பு பரிசு: 3186 காவலர்களுக்கு பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…

2 hours ago

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…

3 hours ago

தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…

3 hours ago