இந்தியாவில் கொரோனாவின் கோர முகத்தை புகைப்படம் மூலம் உலகறிய செய்த பிரபல புகைப்பட நிருபர் மரணம்…!

Default Image

கொரோனாவின் கோர முகத்தை புகைப்படம் மூலம் உலகறிய செய்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராய்ட்டர்ஸ் என்ற பத்திரிக்கையில் புகைப்பட நிருபராக பணியாற்றி வருபவர் தானிஷ் சித்திக்.

இவர், இந்தியாவில் கொரோனா வைரஸின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் ஆப்கான் படைகளுக்கு இடையே நிலவும் மோதல் குறித்த படப்பிடிப்புக்காக அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அப்போது ஆப்கான் படைகளுடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், கந்தகாரில் ஏற்பட்ட மோதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது மரணம் குறித்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்