பாட்னாவில் திருமணம் ஆன இரண்டே நாட்களில் மணமகன் உயிரழந்ததை அடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 15-ம் தேதி பீகார் தலைநகரான பாட்னாவில் உள்ள பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டே நாட்களில் திடீரென மணமகன் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலே மணமகன் உடலை தகனம் செய்துள்ளனர். இதனால் அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா..? என்பதை கண்டறிய முடியவில்லை.
இதனையடுத்து, மணமகனின் நெருங்கிய உறவினர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாட்னாவின் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரின் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்தனர்.
அதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது, சாப்ட்வேர் என்ஜீனியரான தீபாலி தனது திருமணத்திற்காக -சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், அதை அறியாமல் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் மணமகன் உடல் மோசமடைய பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் மணமகளுக்கு கொரோனா தொற்று இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…