ராணி எலிசபெத் மறைவு – நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு
ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார்.
இந்த நிலையில், எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக நாடுகளில் உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், துக்கம் அனுசரிப்பதை முன்னிட்டு நாளை மறுநாள் தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.