முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவரது மறைவை அடுத்து 3 நாட்கள் உத்திரபிரதேச அரசு துக்கம் அனுசரிக்கும் எனவும், அரசு மரியாதையுடன் முலாயம் சிங் யாதவ் இறுதி சடங்கு நடைபெறும் எனவும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…